தடைகள் ஏற்படலாம்
By : ராணி
Update:2023-10-24 00:00 IST
2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
புது முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். வெளிநாட்டு பயணம் மூலமும், நண்பர்களுடன் கூட்டுத்தொழில் செய்வதிலும் பாசிட்டிவான பலன்கள் கிடைக்கும். அதேசமயம் நண்பர்களுடன் பேசும்போது தவறான வழிநடத்துதலும் ஏற்படலாம். சுப விரயங்கள் ஏற்படலாம். 24, 25 தேதிகளில் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நிகழும். சிலநேரங்களில் அதிக மகிழ்ச்சியே குழப்பத்தைத் தரும். எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் மனக் கஷ்டம் வேண்டாம். 26, 27 தேதிகளில் சிறு பொருள் விரயம் மற்றும் தடைகள் ஏற்படலாம். 29, 30 தேதிகளில் மனக்குழப்பம் இருக்கும்.