வெற்றி நிச்சயம்

Update:2025-07-15 00:00 IST

2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாகக் கடன் கிடைக்காமல் தாமதமானவர்களுக்கு, இந்த வாரம் நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். என்ன காரணத்திற்காகக் கடன் வாங்குகிறீர்களோ, அந்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரமாக இது இருக்கும். 6-ம் இடத்தில் குரு ராகுவுடன் இருப்பதால், உடலில் கட்டி, புற்றுநோய், தோல் நோய், அலர்ஜி உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனை என்றாலும் மருத்துவரை அணுகவும். இந்த வாரம் வருமானங்கள் பெரிய அளவில் இருக்கும், ஆனால் அதைவிட இரு மடங்கு செலவுகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் எடுத்த காரியங்கள் நற்பலன்களைத் தரும் வாய்ப்புகள் உண்டு. அதே சமயம், உங்கள் மூன்றாம் இடத்தில் சனி வக்கிரகதியில் இருப்பதால், முதலில் சோம்பேறித்தனத்தைத் தவிர்க்கவும். சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருங்கள். சனி என்றால் காலதாமதம், அதைத் தவிர்க்க வேகமாகச் செயல்படுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் பரவாயில்லை. முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. பதவி உயர்வு, ஊக்கத்தொகை, போனஸ், அரியர்ஸ் அல்லது பிற பணப் பலன்கள் கிடைக்கும். வேலையில் எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களோ, அவ்வளவு அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகள் அல்லது எழுத்துத் தேர்வுகள் எழுதியவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். முருகனையும் அம்பாளையும் வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

வேலை பயம்