எதிர்பாராத பணம்
2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் தேவையற்ற குழப்பங்களையும், சிந்தனைகளையும் தவிர்க்கவும். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பியவர்கள் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். வராத பணம், நிலுவையில் உள்ள பணம் போன்றவை இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் செயலாக்கம் பெறும். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டால் வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் அல்லது எழுத்துத் தேர்வுகளின் முடிவுகள் இந்த வாரம் வந்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வேலையில் உங்கள் சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். எதிர்பாராத பண வரவு அல்லது பொருள் வரவு ஏற்படலாம். உடல் பருமன், தைராய்டு, நீரிழிவு, காது, மூக்கு மற்றும் தொண்டை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். நீண்ட நாட்களாக வேலைக்கு ஆள் தேடுபவர்களுக்கு இந்த வாரம் ஆட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உயர்கல்வி நன்றாக இருக்கும். பேசும்போது கவனமாக இருங்கள்; பேச்சால் நன்மை, பிரச்சனை என இரண்டும் ஏற்படலாம். இந்த வாரம் விநாயகரையும், காளியையும் வழிபடுவது நல்லது.