கவனம் தேவை

Update:2025-09-02 00:00 IST

2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் ராசிநாதன் சனி மூன்றாம் இடத்தில் வக்ர கதியில் இருப்பதால், ஒரு காரியத்தை செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பொழுதுபோக்கு பயணங்கள் அல்லது சுற்றுப்பயணங்கள் ஏற்படும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. வீடு, இடம், ஊர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்களுக்காக செலவுகள் செய்வீர்கள். வேலையில் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும், ஏதேனும் ஒரு வேலை உங்களுக்கு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இந்த வாரம் திருமண வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பணவரவு அல்லது பொருள் வரவு இருக்கும். உயர் கல்வியில் தடைகள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக இருக்கும். ஆராய்ச்சி படிப்பு செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் விநாயகர் மற்றும் பைரவரை வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

அமைதி தேவை