அமைதி தேவை
2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஆகஸ்ட் 16-க்குப் பிறகு எட்டாம் இடத்தில் சூரியன் மற்றும் கேது இருப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இதனால் பிரச்சனைகள், அவமானங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானம் தேவை. ஆகஸ்ட் 16-க்குப் பிறகு உங்கள் உடல்நலம் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளைச் செய்ய இது நல்ல நேரம். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் இந்த வாரம் அதைத் திட்டமிடலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் இந்த வாரம் மிகவும் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் போன்ற நிதிப் பலன்கள் கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கூட்டாளிகள் மூலமும் லாபம் ஈட்டுவீர்கள். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், எட்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால், கணவன்-மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிவன் மற்றும் முருகனை வழிபடுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.