சுறுசுறுப்பு அவசியம்

Update:2025-09-16 00:00 IST

2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இதுவரை வராமல் இருந்த பணம் கைக்கு வர வாய்ப்பு உண்டு. பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாகவும், திட்டமிட்டும் செயல்படுங்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். உறவுகளால் மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பிரிய நேரிடலாம். சொத்து விற்பனைக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த வாரம் விற்பனை நடக்கும் வாய்ப்பு உண்டு. சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் இருந்தாலும், வருமானம் இருக்காது. அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டு. விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். வேலைவாய்ப்பில் முன்னேற்றம் சுமாராக இருக்கும். வியாபாரமும் சாதாரணமாகவே இருக்கும். யாருக்கும் கடன் அல்லது ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த வாரம் செய்யலாம். வெளிநாட்டில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாரம் நீங்கள் விநாயகரையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை

அமைதி தேவை