கடின உழைப்பு தேவை

Update:2025-09-23 00:00 IST

2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் பரவாயில்லை. உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் பணமாகவோ, பொருளாகவோ கிடைக்கும். இருந்தும் சரியான முதலீடுகள் செய்யாவிட்டால், எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாய், தந்தையர் அல்லது குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. நினைத்தால் சாதிக்க முடியும். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் அவசியம். காதல் உறவில் மகிழ்ச்சியும், துயரமும் கலந்திருக்கும். இந்த வாரம் பங்குச்சந்தை, வர்த்தகம் போன்ற விஷயங்களில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழ் , அந்தஸ்து குறைவாக இருக்கும். வேலைவாய்ப்பில் வேலைக்கு பஞ்சம் இருக்காது. வேலை அல்லது இடமாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். கடன்கள் குறையும். விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் விற்பனை ஆகும். இந்த வாரம் நீங்கள் துர்கை மற்றும் முருகனை வழிபடுவது உங்களுக்கு நன்மை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை

அமைதி தேவை