வேலையில் முன்னேற்றம்
2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வேலைவாய்ப்பில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டு. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் அல்லது பணி மாற்றம் போன்றவற்றை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். கடன் விண்ணப்பித்தவர்களுக்குத் தேவையான கடன் கிடைக்கும், அதுவும் நீங்கள் எதிர்பார்த்த நோக்கத்திற்கே நிறைவேறும். வியாபாரம் சிறப்பாக இருக்கும், வருமானம், சம்பாத்தியம், தொழில் என அனைத்தும் நன்மையாகவே அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். முதலீடுகள் செய்வது செலவுகளைக் குறைக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க இது சிறந்த நேரம், நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நம்பியவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். கலைத்துறையினருக்கு புகழ், அந்தஸ்து, வருமானம் அதிகரிக்கும். பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் பெறலாம், ஆனால் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். மேல்படிப்பு, ஆராய்ச்சி, பிஎச்டி செய்பவர்கள் தாராளமாகத் தொடரலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிறு பிரச்சனை என்றாலும் மருத்துவரை அணுகவும். அரசு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அம்பாள் மற்றும் விநாயகரை வழிபடுவது நல்லது.