புதிய காதல் மலரும்
2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் தாமதமானவர்களுக்கும், திருமணம் வேண்டாம் என்று நினைத்தவர்களுக்கும் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும், இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். புதிய காதல் மலர வாய்ப்புண்டு. அது திருமணத்தில் முடியும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். இது உங்களுக்கு மன அமைதியை அளிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு சீராக இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் தவணை முறையில் வந்து சேரும். இது நிதிச் சுமையைக் குறைக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. கடன் அப்ளை செய்தவர்களுக்கு இந்த வாரம் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ அது நிறைவேறும். உங்கள் வெற்றி உறுதி செய்யப்படும். உயர் கல்வி படிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. வேலை மாற்றம் அல்லது கம்பெனி மாறுவதற்கு தாராளமாக முயற்சி செய்யலாம். உங்கள் ஆண் நண்பர்களால் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் ஏற்படும். அந்தஸ்து, புகழ் கூடும். அரசு மூலம் காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத ஆலய தரிசனம் மற்றும் தெய்வ தரிசனம் உண்டு. சொந்தமாக சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். மகாலட்சுமி மற்றும் அம்பாள் வழிபாடு சிறப்பானது.