பொறுமை தேவை

Update:2025-07-15 00:00 IST

2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசியில் செவ்வாய், கேது இருப்பதால், முயற்சிகளை அதிக அளவில் மேற்கொள்ளுங்கள். காதல் விவகாரங்களில் ஒருபுறம் வெற்றி கிடைப்பது போலத் தோன்றினாலும், மறுபுறம் நிறைய போராட்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். குழந்தைகளால் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு உண்டு. வேலையில் கவனம் செலுத்துங்கள், வேலையை விட்டு வெளியேறும் சூழ்நிலைகள் அல்லது வெளியேற்றப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது, மற்றவர்கள் பெயர் எடுக்கலாம். கிரக நிலைகள் வேலைக்குச் சாதகமாக இல்லாததால் பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்கள். கடன் கிடைப்பதில் தடைகள் இருக்கும். ஒருவேளை கடன் கிடைத்தாலும், எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவது கடினம். நல்ல வேலையாட்கள் உங்களை விட்டுப்பிரிய நேரிடலாம். வியாபாரம் சுமாராக இருக்கும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கும் இது பொருந்தும். பங்குதாரர்களுடன் வியாபாரம் செய்தால், அவர்கள் லாபம் அடைவார்கள் அல்லது அவர்களுக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வருமானம் இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகள் சுமாரான பலன்களைத் தரும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வர வாய்ப்பு உண்டு. இந்த வாரம் முழுவதுமே பைரவரையும் நரசிம்மரையும் வழிபடவும்.

Tags:    

மேலும் செய்திகள்