எதிர்பாராத பயணங்கள்
2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசியில் செவ்வாய், கேது இருப்பதால் ஒருபுறம் தைரியமும், மறுபுறம் தேவையற்ற குழப்பங்களும் இருக்கும். மொத்தத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் அதிகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாக வெற்றி பெறும். உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். நீங்கள் நம்பியவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். உங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். பகுதி நேரமாக படிப்பது, எதிர்பாராத பயணங்கள், பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்று சேர்வது போன்ற நல்ல பலன்கள் இந்த வாரம் உண்டு. சிறுதொழில், சுயதொழில், ஆன்லைன் வியாபாரம், டிஜிட்டல் துறைகள், மீடியா மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம், வருமானம் கிடைக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். புதிய காதல் மலர வாய்ப்பு உண்டு. அவை வெற்றி பெற்று திருமணத்தில் முடியலாம். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய பணம் தவணை முறையில் வரும். ஆஞ்சநேயர் மற்றும் துர்கையை வழிபடுவது நல்லது.