எதிர்பாராத பயணம்
2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் பேச்சின் மூலமாக வருமானம் பெருகும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத பயணம் உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். தைரியமாக முடிவெடுப்பீர்கள். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்குப் போகும். உறவுகளுடன் நல்லிணக்கம் பேணப்படும். எதிர்பாராத ஆலய தரிசனம் மற்றும் பொழுதுபோக்கு பயணங்கள் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கை மற்றும் வியாபாரக் கூட்டாளிகளுடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். நாள்பட்ட நோய்கள் மற்றும் கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். கலை மற்றும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழ், அங்கீகாரம் கிடைக்கும். பங்குச்சந்தை, ஊக வணிகம் போன்றவற்றில் மிதமான முதலீடுகள் நல்ல லாபம் தரும். இந்த வாரம் நீங்கள் பைரவரையும், நரசிம்மரையும் வழிபடுவது நல்லது.