பொறுமை அவசியம்
2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ராசிநாதன் சூரியன் 12 ஆம் இடத்தில் இருப்பதால், தந்தையால் செலவுகள் அல்லது தந்தையுடன் பிரிந்திருக்கும் சூழ்நிலை உருவாகலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எந்த ஒரு புதிய முயற்சியிலும் வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறி. வாழ்க்கையில் உங்கள் லட்சியம், திட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள். நீங்கள் என்ன திட்டம் போட்டாலும், உதவி செய்ய யாராவது வருவார்கள். இறை அருளும் உங்களுக்கு உண்டு. கல்வி சிறப்பானதாக இருக்கும். நிரந்தர சொத்துக்கள் (நிலம், வீடு, வாகனம்), வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஐந்தாம் இடத்தில் குருவும் சனியும் பார்ப்பதால், நீண்ட நாட்களாக சுப காரியங்கள் நடைபெறாமல் இருந்தால் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். புதிய காதல் உறவுகள் அமைய வாய்ப்பு உண்டு. ஏற்கனவே காதல் இருந்தால் வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பும், குழந்தைகளால் மகிழ்ச்சியும் உண்டு. வேலைவாய்ப்பில் கவனம் தேவை, வேலையில் பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. வேலையை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபடுவது நல்லது.