முயற்சிகள் வெற்றி பெறும்

Update:2025-08-12 00:00 IST

2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஆகஸ்ட் 16-க்குப் பிறகு நிதி நிலைமை மேம்படும். அதற்கு முன் வருமானங்கள் செலவுகளாக மாற வாய்ப்பு உண்டு. 16-க்குப் பிறகு உங்கள் ராசிக்கு சூரியன் வருவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இருப்பினும், பேச்சைக் குறைத்துக் கொள்வது அவசியம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் நம்பியவர்கள் நேர்மையாக நடந்து கொள்வார்கள். சிறு மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு, குறிப்பாக ஆன்லைன் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் உண்டு. உறவுகளால் நன்மை, மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்த உறவுகள் மீண்டும் சேரும். இளைய சகோதர சகோதரிகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தித் துறையினருக்கு விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் லாபம் சற்று குறைவாக இருக்கலாம். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் சராசரியாக இருக்கும். காதல் விஷயங்களில் சாதகமான சூழல் உண்டு. நரசிம்மர் மற்றும் பைரவரை வழிபடுவது உங்கள் வாழ்வில் நன்மைகளை அதிகரிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்