சுப செலவுகள்

Update:2025-09-09 00:00 IST

2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அல்லது சுப செலவுகள் ஏற்படலாம். இல்லையெனில், தேவையற்ற செலவுகள் ஏற்படும். சூரியனால் தந்தையாலும், புதனால் உறவினர்கள் அல்லது தாய் மாமனாலும், சுக்கிரனால் மனைவி அல்லது அத்தையாலும் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, ஏதேனும் சுப செலவுகளைச் செய்யலாம். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தடைபட்டுக் கொண்டிருந்தால், அவை நடப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் ஐந்தாம் இடத்தை சனி பகவானும், குரு பகவானும் சேர்ந்து பார்ப்பதால், காதல் விஷயங்கள் வெற்றிகரமாக அமையும். நீண்டகால நோய்கள் இருப்பவர்களுக்கு, அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது. தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, உங்கள் பங்குதாரர் லாபம் அடைவார், ஆனால் நீங்கள் நஷ்டம் அடையலாம் அல்லது அவருக்காக உழைக்க வேண்டியிருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம். ஆராய்ச்சி மற்றும் பிஎச்.டி படிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, இந்த வாரம் அவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் எட்டாம் இடத்தில் சனி வக்கரகதியில் இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வி சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உண்டு. இந்த வாரம் சித்தர்கள் மற்றும் துர்கையை வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை