பொறுமை அவசியம்
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அது தவிர வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இருந்தும் வேலையில் பொறுமை மிகவும் அவசியம். கேது ராசியில் இருப்பதால் வேலையில் நிறைய போராட்டங்கள் இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளால் ஒத்துழைப்பு கிடைக்காது. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றை இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் வருவது போல தோன்றும், ஆனால் லாபம் இருக்காது. தொழில்ரீதியாக தகராறுகளும் நிச்சயமற்ற தன்மையும் இருக்கும். பணமும் பொருளும் கண்முன்னே பறிபோவது போல உணர்வீர்கள். பெண் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரிகளால் மனக் குழப்பங்கள் ஏற்படும். புதிய காதல் உறவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரம் பைரவரையும் துர்கையையும் வழிபடுவது நல்லது.