பாவகர்த்தரி தோஷம் ஏற்படும்

தாயாரின் உடல் நலம் மற்றும் வீடு, மனை வாங்குவதில் கவனம் அவசியம்.;

Update:2023-10-10 00:00 IST

2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்க்கும் போது, உங்கள் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் இன்னும் அதிகமான நற்பலன்கள் ஏற்படப்போகிறது. மாமியாரிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். தாயாரின் உடல் நலம் மற்றும் வீடு, மனை வாங்குவதில் கவனம் அவசியம். பாவகர்த்தரி தோஷம் ஏற்படும். தோஷத்தில் இருந்து விடுபட காளஹஸ்தி போன்ற தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்வது நல்லது. இந்த வார ராசியை பொறுத்தவரை, 10, 11, 12 தேதிகளில் தந்தை சார்ந்த விஷயங்களில் சில பிரச்சினைகள் ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. 13,14, 15 ஆகிய தேதிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 16 ஆம் தேதி லாபகரமான விஷயங்கள் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்