பண விரயம் வரலாம்
உதவி என்றால் உடனே வருவார்கள். உடன் பணிபுரிவோரும் அதேபோலத்தான்.;
By : ராணி
Update:2023-08-22 00:00 IST
2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
எதை பேசினாலும் சிந்தித்து பேசுவீர்கள். இந்த வாரம் முழுவதுமே மௌனம் மேலோங்கும். வேலையில் அதீத நாட்டம் இருக்கும். குழந்தைகள் பெற்றோரின் பேச்சை அதிகம் கேட்கமாட்டார்கள். ஆனால், உதவி என்றால் உடனே வருவார்கள். உடன் பணிபுரிவோரும் அதேபோலத்தான். இந்த வாரத்தில் கடன் வாங்கும் சூழலோ, தேவையில்லாத பண விரயமோ வரலாம். அப்பாவுடன் உறவு வலுக்கும். வீட்டிலிருப்போரின் உடல்நலம் நன்றாக இருக்க, தன்வந்திரிக்கு விளக்கேற்றுங்கள். முருகன் மற்றும் குரு பகவானுக்கும் விளக்கேற்றுங்கள். 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.