பேச்சைக் குறையுங்கள்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒரு பக்கம் நன்மையும், இன்னொரு பக்கம் பிரச்சினையும் கலந்த வாரமாக இருக்கிறது. அதனால், தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுங்கள். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சே பிரச்சினையாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறாது. யாரை நம்பியும் எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். தேவையற்ற சிந்தனைகள், தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம். தெளிவாக இருங்கள். எதிர்பாராத பயணம், அந்தப் பயனத்தாலும் பிரச்சினைகள் இருக்கலாம். உறவுகளால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதோ ஒரு வேலை, வருமானம், சம்பாத்தியம் இருக்கும். ஒருவேளை நீங்கள் வேலையில்லாமல் இருந்தால் வேலைக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் முருகப்பெருமான் வழிபாடு மற்றும் நரசிம்மர் தரிசனம் மிகவும் முக்கியம்.