ஆரோக்கியத்தில் கவனம்
By : ராணி
Update:2023-12-12 00:00 IST
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தைரியம், தன்னம்பிக்கை இருக்கும். நினைப்பது நடக்கும். பொருளாதாரம் சுமாராக இருக்கும். கஷ்டப்பட்டு சம்பாதிப்பவை பணமாகவோ, தனமாகவோ கையில் இருக்கும். பேச்சின்மூலம் வருமானம் கிட்டும். தேவையற்ற குழப்பங்கள், கவலைகள் வேண்டாம். சொத்துகள் வாங்க வாய்ப்பு உள்ளது. விவசாயம், உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அம்மா மற்றும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட், டிஜிட்டல் கரன்சி மற்றும் லாட்டரியில் முதலீடு செய்யலாம். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெருமாள், அம்பாள் வழிபாடு செய்ய நற்பலன்கள் கூடும்.