விருச்சிகம் - வழக்குகளில் ஜெயிப்பீர்கள்

Update:2024-03-19 00:00 IST

2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் நல்ல லாபம் இருக்கிறது. கல்வி மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பொருளாதார ரீதியாக பரவாயில்லை. யாருடைய பணமாவது கையில் இருந்துகொண்டே இருக்கும். சனி பகவானுடைய பார்வை உங்களுக்கு இருந்துகொண்டே இருப்பதால் மே மாதம் வரை வேலைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. பணி உயர்வு, சம்பள உயர்வு ஏதாவது ஒன்று இருந்துகொண்டே இருக்கும். உழைப்பு அதிகமாக இருக்கும். வருமானம் குறைவாக இருக்கும். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் நிறைய கடன்களை தூக்கி சுமக்காதீர்கள். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்தாலும் தேவையில்லாத செலவினங்களும் உள்ளது. திருமண விஷயங்கள் பரவாயில்லை. காதல் வெற்றியடைய வாய்ப்பில்லை. பொறுமையாக இருங்கள். எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் நிதானம் அவசியம். யாரையும் நம்பாதீர்கள். மற்றவர்கள் கூறுவதை கேட்டாலும் நீங்களே முடிவெடுங்கள். அம்பாள் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் முக்கியம்.  

Tags:    

மேலும் செய்திகள்