தடைகள் நிறைந்த காலம்

Update: 2024-05-06 18:30 GMT

2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் அம்மா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் உங்களின் பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம், பேங்க் பேலன்ஸ் இருக்கிறது. நீண்ட நாட்களாக நகை, ஆடை ஆபரணங்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உள்ளன. உங்களின் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். எண்ணங்கள் வித்தியாசமாகவும், சிந்தனைகள் பெரிய அளவிலும் இருக்கும். ஆனால் அவை செயலாக்கம் செய்வதில் தடைகள் இருக்கின்றன. இந்த தடைகள் அனைத்தையும் ஜெயிக்க வாய்ப்புகள் இல்லை. பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு மாற்றம் முன்னேற்றம் அமையும். ஷேரில் பெரிய முதலீடு வேண்டாம். குறிப்பாக விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். 5-ஆம் இடத்தில் செவ்வாய், ராகு உள்ளன. அது உங்கள் உணர்வுகளை தூண்டிக் கொண்டே இருக்கும். லாட்டரி, ரேஸ், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்ற எதிலும் முதலீடுகள் வேண்டாம். சொந்த தொழிலும் லாபகரமாக இல்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு கடன் வாங்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியை தரிசனம் செய்யுங்கள். சிவ வழிபாடும் முக்கியம்.    

Tags:    

மேலும் செய்திகள்