நண்பர்களிடம் கவனம்
2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் அந்தஸ்து, புகழ், செல்வாக்கு கூடும். ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கவோ, தொழில்முனைவோராக ஆகவோ எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான சந்தர்ப்பங்கள் அமையும். நட்பு வட்டாரத்தில் கவனமாக இருங்கள், பழைய நட்புகள் பிரிய நேரிடலாம். மூத்த சகோதர-சகோதரிகளிடமும் பிரிவினைக்கான சூழல் உருவாகலாம். திருமண வாழ்க்கையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தொழிலில் பெரிய முதலீடுகள் இன்றி இயல்பான முதலீடுகளே நல்ல லாபத்தைத் தரும். காதல் விஷயங்களில் வெற்றி உண்டு. காதல், திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. பிரிந்தவர்கள் மீண்டும் சேருவதற்கான வாய்ப்புகளும் இந்த வாரம் உள்ளது. சொத்து வரவு, கணவன்-மனைவி மூலம் தனவரவு, பூர்வீக சொத்து, எதிர்பாராத பண வரவு ஆகியவை உண்டு. நான்காம் இடத்தில் ராகு, குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால், கல்வியில் தடை ஏற்படலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம், உங்கள் உடல்நிலையில் அக்கறை ஆகியவை தேவை. நன்மைகள் இருந்தும், எதையோ இழந்தது போன்ற உணர்வு இந்த வாரம் ஏற்படலாம். எனவே, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்வது அவசியம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருந்தாலும் லாபம் குறைவாக இருக்கும். இந்த வாரம் சிவனையும், குறிப்பாக பிரம்மாவையும் வழிபட்டுவர நன்மைகள் உண்டாகும்.