செலவுகள் அதிகரிக்கும்
2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் காதல் வெற்றி பெறும். ஏற்கனவே பிரிந்திருந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் இருந்தவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கூடும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். வேலை, வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் வேலைக்காக நேர்காணலுக்கு சென்றிருந்தால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் சுமாராக இருக்கும். உங்களுடைய உழைப்பால் மற்றவர்கள் லாபம் அடைவார்கள். யாருக்காவது பணம் கடன் கொடுத்திருந்தால், அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. நீங்கள் கூட்டுத்தொழில் செய்தால், உங்கள் பார்ட்னர் லாபம் அடைவார், ஆனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். இந்த வாரம் உங்கள் கையில் பணம் இருந்தாலும், மே 14-ஆம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். எல்லாமே இருந்தும் இல்லாதது போன்ற மனநிலை உருவாகலாம். இந்த வாரம் துர்க்கை மற்றும் விநாயரை வழிபடுவது நல்லது.