கடன் குறையும்

Update:2025-05-27 00:00 IST

2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் கடன் தொல்லைகள் குறையும்; நோயிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. உங்களின் உழைப்பு பிறருக்கு லாபத்தைத் தந்தாலும், உங்களுக்கு பலன் இல்லை. அதேபோல் புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் புதிய வரவுக்கான வாய்ப்புகளும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னோர்களின் சொத்து கிடைப்பதற்கான வாய்ப்புகளும், எதிர்பாராத தன வரவும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில், குறிப்பாக உங்கள் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய அளவில் சொத்து வாங்குவதில் சாதாரண லாபமே கிடைக்கும். கல்வியில் கவனம் செலுத்துங்கள். தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைத்திருப்பது நல்லது. யூகவணிகங்களில் முதலீடுகள் இந்த வாரம் சாதகமாக இருக்காது. கலைத்துறையினருக்குப் புகழும், அந்தஸ்தும் கூடும். வியாபாரங்கள் பெரிய அளவில் கை கொடுக்காது; பொறுமை தேவை. வேலை சுமாராக இருக்கும், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், ஆனால் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு பெரிய அளவில் இருக்காது. நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வருவாயைப் பெற முடியும். இந்த வாரம் முழுதும் சிவன் கோயிலில் உள்ள பிரம்மாவையும், மகா கணபதியையும் வழிபடுவது நன்மை பயக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்