எதிர்பாராத தனவரவு
2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் அந்தஸ்தும் புகழும் கூடும் வாய்ப்பு உள்ளது. கோச்சாரத்தில் 8-ம் இடத்தில் சூரியன், குரு இருப்பதால் பொறுமை அவசியம். பூர்வீக சொத்து கிடைக்காதவர்களுக்கு இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து இல்லாதவர்களுக்கு கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு அல்லது எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய காதல் மலர வாய்ப்பு உண்டு. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும், அந்தஸ்தும் கிடைக்கும். பங்குச்சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்வதையும், வர்த்தகம் செய்வதையும், லாட்டரி, பந்தயம் போன்ற வணிகங்களில் பெரிய முதலீடு செய்வதையும் தவிர்க்கவும். லாபம் கிடைப்பதை போல் தோன்றினாலும் குறைய வாய்ப்பு உள்ளது. அம்மாவின் உடல் நலத்திலும், உங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள். தொழில் ரீதியாக இந்த வாரம் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். லாபம் கிடைப்பது போல தோன்றினாலும், கைக்கு வருவதில் சிரமம் இருக்கும். அவசரப்பட்டு கடன் வாங்குவதை தவிர்க்கவும். இந்த வாரம் பிரம்மாவையும், சிவபெருமானையும் வழிபடுங்கள்.