புதிய காதல் மலரும்

Update:2025-06-17 00:00 IST

2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் அந்தஸ்து, புகழ், வருமானம் கூடும். நட்புறவில் கவனம் செலுத்துங்கள். நெருங்கிய நண்பர்கள் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் செலவு அதிகரிக்கும், அவர்களிடமிருந்து சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். முயற்சிகளில் சற்று தடுமாற்றம் இருந்தாலும், கடின உழைப்பு வெற்றி தரும். குழப்பங்களைத் தவிர்த்து, எந்த செயலையும் தொடங்கும் முன் நன்கு யோசியுங்கள். உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய காதல் அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். பங்குச்சந்தை, லாட்டரி போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் முன்னேற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. வியாபாரம் சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் சிவபெருமானையும், பெருமாளையும் வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்