புதிய காதல் மலரும்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர் கல்வி நன்றாக இருக்கும். உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாள்பட்ட நோய் இருந்தால், ஏதோ ஒரு விதத்தில் குறையும். புதிதாய் காதல் மலரும். உங்கள் காதல் வெற்றிகரமாக முடிவதற்கான சூழ்நிலைகளும் இருக்கின்றன. முறிந்த காதல் மீண்டும் சேரும். யூக வணிகங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சாதாரண முதலீடு செய்யுங்கள். ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வருமானங்கள், சம்பாத்தியங்கள் கூடும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு. எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. தொழில் சுமார். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பது போன்று தோன்றினாலும், கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு பிரிவு அல்லது மருத்துவச் செலவுகள் இருக்கிறது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தால் அது வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் விநாயகரையும், உங்களின் குலதெய்வத்தையும் நன்றாக வணங்கி வாருங்கள்.