யாரையும் நம்பாதீர்கள்

Update:2024-05-14 00:00 IST

2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு நிகழ்வுகள், பயணம் போன்றவை இருக்கின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. கையில் பணம், தனம் இருந்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். இந்த வாரம் வெற்றி என்பது குறைவாக இருப்பதால், எல்லாவற்றிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாரையும் நம்பி செயல்படாதீர்கள். அவர்கள் உங்களுக்கு கை கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தீர்கள் என்றால் ஓரளவுக்கு லாபம் இருக்கிறது. இந்த வாரம் பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் கவனமாக இருங்கள். வேலையை பொறுத்தவரை ஏதோவொரு பணி, முன்னேற்றம் இருக்கிறது. உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இரண்டாம் திருமணம் செய்ய ஆசைப்படுபவர்கள் செய்யலாம். நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறவில்லை, திருமணம் வேண்டாம் என்றிருந்தவர்களுக்கு திருமணம் கைகூட வாய்ப்புகள் உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, அந்நிய மொழி பேசும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. இந்த வாரம் சனி பகவான் வழிபாடு மற்றும் பைரவர் தரிசனம் முன்னேற்றத்தை தரும். 

Tags:    

மேலும் செய்திகள்