புதிய காதல் மலரும்

Update:2024-07-02 00:00 IST

2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வாங்குவதற்கான வாய்ப்பு அமையும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருந்துகொண்டே இருக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. உங்களை அறியாத பொழுதுபோக்கு நிகழ்வுகள், பயணம் ஆகியவை இருக்கின்றன. இதற்காக நிறைய செலவு செய்ய வேண்டிய காலகட்டங்களும் உருவாகும். குழந்தைகளை பிரிந்து இருப்பீர்கள். அவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களால் நிறைய மன வருத்தங்கள், போராட்டங்கள் ஏற்படும். வேலையை பொறுத்தவரை முயற்சி எடுத்து செய்யுங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் ஒரு திருப்தியற்ற மனநிலை இருக்கும். அதனால் செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஏதோவொரு வகையில் வேலையில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புதிய காதல் மலரும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களின் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு