நினைத்தது நடக்கும்

Update:2024-09-10 00:00 IST

2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. கடந்த வாரத்தில் இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி, நீங்கள் நினைத்தது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை இருக்கிறது. தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். வீடு, இடம் நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருந்தால் நல்ல விலைக்கு போகும். உறவுகளாக மகிழ்ச்சி, சந்தோஷம், நற்பலன்கள் உண்டாகும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட், பிட்காயின்ஸ், கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். எல்லாமே லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம் மட்டுமே தரும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஏதோவொரு வேலை இருந்துகொண்டே இருக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கையும் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் முருகனையும், துர்க்கையையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை