லாபகரமான வாரம்

Update:2025-06-24 00:00 IST

2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களுக்கு வருமானங்களும், செலவுகளும் இருக்கும். உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் சனி இருப்பதால், கையில் பணம் இருந்தால் முதலீடு செய்வது நல்லது. பெரிய அளவில் பணம் இல்லாதவர்களுக்கு சில செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க, பணம் இருந்தால் முதலீடு செய்வது சிறந்த வழி. இந்த வாரம் பெரிய அளவிலான முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை அலைச்சலையும், மன உளைச்சலையும் மட்டுமே தரும். தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் திருப்தியற்ற மனநிலை இருக்கும். எனவே, கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொண்டு ரசித்து செய்யுங்கள். வியாபாரம் சுமாராக இருந்தாலும், முதலீடு செய்ய தயங்க வேண்டாம். ஏனெனில் வருமானம் மற்றும் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும், நட்புகளும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழும், அந்தஸ்தும், வருமானமும் கிடைக்கும். பங்குச்சந்தையில் வழக்கமான முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், சனி பகவானையும், நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய புதன் பகவானையும் வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை