மேஷம் - முயற்சிகள் வெற்றியாகும்

Update:2024-01-30 00:00 IST

2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் உண்டாகும். புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். என்னவாக ஆக நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுவீர்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. முயற்சிகள் வெற்றியாகும். நம்பியவர்களால் நற்பலன்கள் கிடைக்கும். வேலை நிமித்தமான பயணம் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. பெரிய அளவில் முதலீடுகள் செய்பவர்களுக்கு சுமாரான காலம். குழந்தைகளினால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த தொழில் சுமாராக இருக்கும். உயர்கல்வி நன்றாக உள்ளது. முயற்சி செய்தால் பணியில் முன்னேற்றம் ஏற்படும். விநாயகர் மற்றும் துர்க்கை வழிபாடு மிக முக்கியம். 

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு