ஆரோக்கியத்தில் கவனம்
By : ராணி
Update:2023-12-05 00:00 IST
2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் உண்டு. அடிக்கடி ஆலய தரிசனம் செய்வீர்கள். வேலை காரணமாக இடமாற்றங்கள் ஏற்படும். காதலில் மகிழ்ச்சி இருக்கும். புது காதல் மலரும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். கையில் எப்போதும் பணம் இருக்கும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் பிரிந்துபோக வாய்ப்புகள் உள்ளது. கணவன் - மனைவி பிரிவோ அல்லது வைத்தியச் செலவுகளோ ஏற்படலாம். மூத்த சகோதர, சகோதரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், மன வருத்தங்கள் வரும். நண்பர்களிடம் சரியாக நடந்துகொள்வதும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகர், மகாலட்சுமி வழிபாடு செய்ய நற்பலன்கள் கிட்டும்.