விரயங்களுக்கு வாய்ப்பு

Update:2023-10-31 00:00 IST

2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

சற்று சாதகமான பலன்கள் இருந்தாலும் சிறுசிறு பிரச்சினைகள் வரும். கடன் வாங்கல், கொடுக்கல் மற்றும் பூர்விகம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். திருமணம் சார்ந்த விஷயங்களில் தடைகள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே குழப்பங்கள் இருக்கும். 3ஆம் தேதிக்கு பிறகு பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும். 31, 1 தேதிகளில் பேச்சில் பொறுப்புடன் இருக்கவேண்டும். 2, 3 தேதிகளில் புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். 4, 5, 6 தேதிகளில் எந்த செயலிலும் ஈடுபடவேண்டாம். விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு