இறுதியில் வெற்றி
By : ராணி
Update:2023-12-19 00:00 IST
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பாத்தியங்கள் தனமாகவோ, பொருளாகவோ கையில் இருக்கும். அதை முதலீடு செய்யாவிட்டால் தேவையற்ற விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். தேவையில்லாமல் கடன் வாங்கவேண்டாம். முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றிதான். உறவுகளால் நற்பலன்கள் உண்டு. யாரை நம்புகிறீர்களோ அவர்களுடைய உதவி கிடைக்கும். பழைய பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்குவீர்கள். இஷ்ட தெய்வம் மற்றும் விநாயகரை வழிபட்டால் நற்பலன்கள் ஏற்படும்.