முயற்சிகள் வெற்றியடையும்
2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பாராத பயணங்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. பணம், தனம், பொருள் கையில் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. இல்லை என்றால் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும். தள்ளிப்போன திருமணம் நடைபெறும். நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அம்மாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேலையாட்கள் கிடைப்பார்கள். வளர்ப்பு பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டவர்கள் அதனை வாங்கலாம். இரண்டாவது திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டும் சிறப்பாக உள்ளது. முருகப்பெருமான் மற்றும் மகா விஷ்ணு ஆகியோரை வழிபட்டால் இன்னும் ஏற்றம் கிடைக்கும்.