பயணங்கள் வேண்டாம்
By : ராணி
Update:2023-10-17 00:00 IST
2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ஏழரை சனியால் சில காலங்களாகவே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறீர்கள். குடும்பத்தில் குழப்பம், மன கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் இருப்பதால் சனிக்கிழமை முருகன் வழிபாடு கட்டாயம் அவசியம். நல்லெண்ணெய் தீபம் ஏற்றுதல் நல்லது. 17, 18 தேதிகளில் தொழில்சார்ந்த விஷயங்களில் செய்யும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். 19, 20 தேதிகளில் பொருள் சார்ந்த விஷயத்தில் கவனம் அவசியம். 20, 21 தேதிகளில் விரயம் ஏற்படலாம். 22, 23 தேதிகளில் மனக்குழப்பம் இருக்கும். எனவே பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.