பதற்றம் கூடும்
வேலையில் சிரமங்கள் இருந்தாலும் அதை நேர்மறையோடு எதிர்கொள்வீர்கள்.;
By : ராணி
Update:2023-09-05 00:00 IST
2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் வேலையும் பணியிடமும் அமைதி தரும். வேலையில் சிரமங்கள் இருந்தாலும் அதை நேர்மறையோடு எதிர்கொள்வீர்கள். வீட்டில் மந்தமாக செயல்படுவீர்கள். வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். அதற்காக நீங்கள் மெனக்கெட வேண்டியிருக்கும். அதனால் நிறைய பதற்றம் உண்டாகும். இந்த வாரம் 8, 9 மற்றும் 10—ம் தேதி காலை வரை சற்று கவனம் தேவை. குடும்பத்தினருக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில் உண்டாகும் சிக்கலால் உங்கள் பதற்றம் கூடும்.