வேலையில் ஜாக்கிரதை
செல்போன் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றும் சூழல் ஏற்படலாம்.;
By : ராணி
Update:2023-09-12 00:00 IST
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
உங்களுடைய பேச்சு நன்றாக இருக்கும். சொல்ல வருவதை எதிரிலிருப்பவர்கள் புரிந்துகொள்ளும் படியாக தெளிவாகப் பேசுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். தேடிவந்து உதவுவர். அதேசமயம் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். செல்போன் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றும் சூழல் ஏற்படலாம். வேலையில் ஜாக்கிரதையாக இருங்கள். யாரையும் புண்படுத்தும்படி பேசவேண்டாம். வேலையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும். கணவன் - மனைவியிடையே விரிசல் வரலாம். 18- ஆம் தேதி சற்று கடினமாக இருக்கும்.