பேச்சில் கவனம்
2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் நீங்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே போதுமானது. புதிய முயற்சிகள் பெரிய அளவில் வேண்டாம். நீங்கள் யாரை நம்பியிருக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க மாட்டார்கள். அதனால், ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாத வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த வாரம் கவனமாக இருங்கள். போக்குவரத்து மற்றும் வண்டி, வாகனங்களை உபயோகிக்கும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். தேவையற்ற விஷயங்களைப் பெரிதாக எண்ணிக் கவலைப்பட வேண்டாம். தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பீர்கள். யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால், பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கலாம், ஆனால் உங்களுக்குப் பயன் இல்லை. கணவன் - மனைவிக்குள் சிறிய கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்படலாம். கூட்டுத்தொழிலில், பார்ட்னர் லாபம் அடைவார். தேவையற்ற விஷயங்களைப் பேசாதீர்கள். உங்கள் பேச்சில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடியுங்கள். இந்த வாரம் முழுவதும், நரசிம்மரையும், குறிப்பாக பைரவரையும் வழிபடுவது நல்லது.