யாரையும் நம்ப வேண்டாம்

Update:2025-05-20 00:00 IST

2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கு அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். அரசாங்க விஷயங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். சில தடைகள் இருந்தாலும், எதிர்பாராத தன வரவு மற்றும் பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் இந்த வாரம் உங்களுக்கு அதிகம் உண்டு. காதல் விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய காதல் மலரும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உங்கள் கையில் தங்காமல் இருந்திருந்தால், இந்த வாரம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைக்காகக் காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் அடக்கி வாசிப்பது நல்லது. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். வேலையிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம். யாரையும் நம்ப வேண்டாம். தேவையற்ற மன உளைச்சல், பிரச்சினைகள், போராட்டங்கள் உங்கள் கரியரில் உருவாகலாம். எதிர்பாராத தெய்வ தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் மகாலட்சுமி மற்றும் பைரவரை வழிபட்டு வாருங்கள், நன்மைகள் பெருகும்.

Tags:    

மேலும் செய்திகள்