வேலையில் பொறுமை
2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் முனைவோராகவோ அல்லது பெரிய தொழிலதிபராகவோ ஆக விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆனால், அதற்கு ஏற்ற செலவுகளும் உண்டு. இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நம்பியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இளைய சகோதர-சகோதரிகளால் நன்மை ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சைகள் வெற்றி பெறும். திருமண வாய்ப்புகள் அமையாதவர்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் அல்லது நிச்சயம் நடப்பதற்கான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். கூட்டாகத் தொழில் செய்தால், பங்குதாரர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடையக்கூடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கூடும். வேலையில் டார்கெட், மன அழுத்தம், வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் உழைத்தாலும், மற்றவர்கள் பெயர் வாங்குவார்கள். இது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் தோன்றலாம். எனவே, இந்த வாரம் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இந்த வாரம் ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வணங்குவது நல்லது.