உறவுகளால் மகிழ்ச்சி

Update:2025-06-24 00:00 IST

2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் விருப்பங்களும், ஆசைகளும் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தகவல் தொடர்பில் சிறந்து விளங்குவீர்கள். அனைத்து மீடியாக்களையும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் நம்பியவர்கள் உண்மையாகவும், உங்களுக்கு சாதகமாகவும் இருப்பார்கள். உறவுகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டு. இளைய சகோதர-சகோதரிகளால் நன்மை உண்டாகும். பயணங்கள் அதிகம் இருக்கும். இதனால் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். வழக்கமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுங்கள். நிலையான அசையும் அல்லது அசையா சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய காதல் உறவுகளுக்கான வாய்ப்புகள் உண்டு. காதலில் போராட்டங்கள் இருந்தாலும், எதிர்காலத்தில் காதல் வெற்றியடையும். தொழிலைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். வேலையில் அவசரம் அல்லது வெளியேற்ற சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையும், நிதானமும் தேவை. உங்கள் உழைப்பு அடுத்தவர்களுக்கு லாபமாக இருக்கும். வேலையில் அங்கீகாரம் கிடைக்காததால் போராட்டங்கள் இருந்தாலும், வேலையை பொறுமையாக ரசித்துச் செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். தொழிலில் லாபம் கிடைப்பதை போல் தோன்றினாலும், போராட்டங்கள் இருக்கும். இந்த வாரம், பைரவரையும், துர்க்கையையும் வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை