புதிய முயற்சிகள்

Update:2025-07-08 00:00 IST

2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் லாபம், வருமானம், சம்பாத்தியம் உண்டு. தெய்வ அனுகூலம் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செயல்படுத்துவீர்கள். கடந்தகால மன குழப்பங்கள் நீங்கி, தெய்வத்தின் அருள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உங்கள் முயற்சிகள் கை கொடுக்கும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். இது உங்களுக்கு மன அமைதியை அளிக்கும். இடம், வீடு மாற்றங்கள் உண்டு. இது புதிய சூழலுக்கு வழிவகுக்கும். நீண்ட நாட்களாக உங்கள் சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால், இந்த வாரம் நல்ல விலைக்கு போகும். சிறு தொழில், சுய தொழில், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங், டிரான்ஸ்போர்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கம்யூனிகேஷன், கட்டுமானம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும். வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். வேலையை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பொறுமையாகவும், விட்டுக்கொடுத்தும் செல்லுங்கள். சொல்ல முடியாத சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொறுமை அவசியம். வியாபாரத்தில் லாபம் கிடைப்பது போல தோன்றினாலும், தடைகள் உண்டு. குடும்பத்தில் புதிய வரவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் விருப்பங்கள், ஆசைகள் நிறைவேறும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் மற்றும் அந்தஸ்து கிடைக்கும். பைரவரையும் ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்