ஆசைகள் நிறைவேறும்

Update:2025-06-17 00:00 IST

2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களுடைய விருப்பங்களும், ஆசைகளும் ஏதோ ஒரு வகையில் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சிறு தொழில், சுயதொழில் செய்பவர்களுக்கு, குறிப்பாக ஆன்லைன் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். விளம்பரம், ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி நன்றாக இருக்கும். தாயின் அன்பு மற்றும் ஆதரவை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குச்சந்தை, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் கரன்சி, லாட்டரி போன்றவற்றில் சாதாரண முதலீட்டிலேயே எதிர்பார்த்த லாபம் அல்லது பலன் கிடைக்கும். வேலையில் நிறைய போராட்டங்கள் இருக்கும். அதனால் அடக்கி வாசிக்கவும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், வேலையை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இந்த வாரம் உங்களுக்கு வேலையில் அங்கீகாரம் கிடைக்காத நிலை தொடரும். கணவன்-மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த வாரம் சனி பகவானையும் பைரவரையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை