தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
இந்த வாரம் உங்கள் பேச்சு நடை, பாணி மற்றும் தொனியில் வித்தியாசம் தோன்றும்.;
By : ராணி
Update:2023-08-01 09:45 IST
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
உங்கள் தாயாரின் பிரார்த்தனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் பேச்சு நடை, பாணி மற்றும் தொனியில் வித்தியாசம் தோன்றும். சனி எட்டாம் வீட்டில் இருப்பதால் உங்கள் வேலையில் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். அதற்கு தாயாரின் பிரார்த்தனை கைகொடுக்கும். சிறு தவறினால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் ஆலோசனைகள் மற்றவருக்கு விபரீதமாகலாம். எனவே தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்த வாரம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.