வேலையில் ஒற்றுமை இருக்காது
முக்கியமாக வேலை அல்லது வீட்டில் இடமாற்றம் இருக்கலாம்.;
By : ராணி
Update:2023-09-12 00:00 IST
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வேலையில் நன்றாக இயங்குவீர்கள். ஆனால் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் வேலையில் ஒற்றுமை இருக்காது. அதேபோல், ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை இருக்கும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். முக்கியமாக வேலை அல்லது வீட்டில் இடமாற்றம் இருக்கலாம். இதனால் வளர்ச்சி கிட்டும். நினைத்தவுடன் அனைவருடனும் பேசிவிட முடியாது. இதனால் நினைத்ததை சாதிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குரு, சந்திரன் மற்றும் முருகனுக்கு விளக்கேற்றினால் சூழல் நன்றாக அமையும்.