புகழ் கிடைக்கும்
By : ராணி
Update:2023-12-26 00:00 IST
2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையில் கவனம் தேவை. அவசரப்பட்டு கம்பெனி மாற நினைக்க வேண்டாம். அவசியம் இருந்தாலொழிய கடன் வாங்க வேண்டாம். முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பயணம் அமையும். ஆலய தரிசன வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். இரண்டாம் திருமணத்துக்கு முயற்சிக்கலாம். கவுரவும், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். பெருமாள் ஸ்தல கருடாழ்வார் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய முன்னேற்றம் அமையும்.