புது முயற்சிகள் வேண்டாம்
By : ராணி
Update:2023-10-17 00:00 IST
2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
புது முயற்சிகள் வேண்டாம்17, 18 தேதிகளில் வீடு, மனை, வாகனம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். வாகனங்களில் சாகசம் செய்யவேண்டாம். தேவையில்லாத சுகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். பொருள் வாங்குதல், விற்றலில் கவனம் தேவை. சொகுசு பங்களா மற்றும் பொருட்கள் வாங்குவதில் கவனம் வேண்டும். 18, 19 தேதிகளில் சில பிரச்சினைகள் வரலாம். புது முயற்சிகள் வேண்டாம். கடைசி 4 நாட்களில் புது முயற்சிகள், வேலை சம்பந்தமான விஷயங்கள், நண்பர்கள், பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள், வெளிநாட்டு பிரயாணங்கள், கொடுக்கல் வாங்கலில் சாதகமான பலன் கிட்டும்.